Cini Mini

Cini Mini Cinema News And Promotions

தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரச...
17/11/2025

தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.

மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

சென்னையில் 35 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த கதை சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்த இந்தப் படத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை பிரதிபலிக்கும் நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், வைஷாக், ஆண்டனி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் கானா பாலா ஆகியோர் தங்கள் குரல்களால் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தி மாபோகோஸ் கம்பெனி பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் நவீனத்துவம், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள இளம் திறமையாளர்களைக் கொண்ட படம்.

*நடிகர்கள்:*
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, வி.ஜே. மகேஸ்வரி, சாணக்கியன், வி.ஜே. பார்வதி, லிவிங்ஸ்டன், ஜாவா சுந்தரேசன், சூப்பர் சுப்ரமணி, தீப்ஸ், உமா பத்மநாபன், ரத்னா (சன் நியூஸ்), வினோத் முன்னா, ரயில் ரவி, ரோஷன், விபிதா தெக்கேபட், சங்கீதா ராஜு, மஹிமா, மாதுரி வாட்ஸ், மிருதுளா சுரேஷ்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

பேனர் - தி மாபோகோஸ் கம்பெனி,
எழுத்து, இயக்கம் - பிரவீன் சரவணன்,
தயாரிப்பாளர் - பிரதீப் மகாதேவன்,
இசையமைப்பாளர் - எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்,
ஒளிப்பதிவாளர் - கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ,
எடிட்டர் - தினேஷ் பொன்ராஜ்,
கலை இயக்குநர் - எஸ். மதன் குமார்,
நடன இயக்குநர் – அசார்,
விஎஃப்எக்ஸ் - செல்வதாசன் (ரேமேக்ஸ் ஸ்டுடியோஸ்),
கதை - ஷம்மீர் சுல்தான்,
ஆடை வடிவமைப்பாளர் - ப்ரீத்தி சிங் (Au லினன்),
தலைமை இணை இயக்குநர் - இ. தாமுதரன்,
இணை இயக்குநர் – எஸ்.சூரிய பிரகாஷ்,
காஸ்ட்யூமர் - கே.கே. தன்ராஜ்,
படங்கள்– அன்பு,
ஒப்பனை - மணி சீராளன்,
பாடல் வரிகள் - நவீன் பாரதி,
ஒலிக்கலவை - ராம்ஜி சோமா,
டப்பிங் - லியோ தாஸ் (சவுண்ட்ஸ் ரைட்ஸ்),
எஸ்எஃப்எக்ஸ் – சண்முகம், எஸ். நிஷோக்,
கலரிஸ்ட் - ஜி. பாலாஜி,
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – பெனு நந்தா,
விளம்பர வடிவமைப்பாளர் - போஸ்டர் காரன்,
தயாரிப்பு நிர்வாகி - விஜயகுமார் சண்முகம்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் - வி.கே. ஸ்ரீஜித்,
நிர்வாக தயாரிப்பாளர் - பி.எஸ். வினோத் செல்லையா,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - பிரவீன் சரவணன்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர்,
ஆடியோ ஆன் – சரிகம.

புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளான...
17/11/2025

புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது.

டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும் சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன் மற்றும் யோகி பாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை தயாரித்து பார்வையாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்தது இந்நிறுவனம்.

தற்போது விஷன் சினிமா ஹவுஸ் மீண்டும் நடிகர் ஏகனுடன் இணையும் ’புரொடக்‌ஷன் நம்பர் 3’ படத்தை அறிவித்துள்ளது. ‘ஆஹா கல்யாணம்’ பட புகழ் இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கும் இந்தப் படம் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. புதிய திறமையாளர்களுடன் பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்தப் படம்.

‘ஜோ’, ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய படங்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஏகன் இந்தப் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்கள், ஆழமான நடிப்பு ஆகியவற்றிற்காக பெயர் பெற்ற ஏகன் தமிழ் சினிமாவின் அடுத்தத் தலைமுறை நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார்.

‘கோர்ட்: ஸ்டேட் vs எ நோபடி’ தெலுங்கு படம் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். ‘புரூஸ் லீ பிஜி’ படத்தில் அறிமுகமாகி, மலையாளத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் படமான ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’ மற்றும் ’சேஷம் மைக்கேல் ஃபாத்திமா’ படங்களில் சிறப்பாக நடித்த ஃபெமினா ஜார்ஜ் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.

தரமான கதைகளை தயாரிப்பது மற்றும் திறமையாளர்களை ஊக்குவிக்கும் தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்லும் வகையில், விஷன் சினிமா ஹவுஸ் அர்ப்பணிப்புடன் தனது மூன்றாவது படத்தை தயாரித்து வருகிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

திருமலை புரொடக்ஷன் கா. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுத்து, இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்ல...
17/11/2025

திருமலை புரொடக்ஷன் கா. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் எழுத்து, இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்.

தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை பின்னணியாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், இது வரை சொல்லப்படாத கதையை விவரிக்கும், காட்டப்படாத களத்தை காண்பிக்கும் திரைப்படமான‌ 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு மண்ணின் கதையை திரையில் பேசுகிறது. இப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

திருமலை புரொடக்ஷன் பேனரில் கே. கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் இயக்கியுள்ளார். கொங்கு வட்டார மக்களின் வாழ்வியில் முறை, சிறு தெய்வ வழிபாடு நம்பிக்கை, அவர்களின் நிலத்தின் இன்றைய நிலமை பற்றி படம் பேசுகிறது. ஒரு கிராமத்தில் வாழ்த்து வந்த உணர்வை நிச்சயம் கொடுக்கும் நல்ல படமாக இது உள்ளது என்று இது வரை இத்திரைப்படத்தை பார்த்த எழுத்தாளர்களும் திரை பிரமுகர்களும் பாராட்டியுள்ளனர்.

புதிய சிந்தனைகள், புதிய நடிகர்கள், புதிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில் 'ஒண்டிமுனியும் நல்லபாடாவும்' திரைப்படம், சமகால யதார்த்தத்தைப் பேசும் ஓர் உன்னதக் கதைக்களம். அதிகாரப் போட்டிகள், உழைப்புச் சுரண்டல் மற்றும் நிலவுரிமைப் போராட்டங்களை மிக நுட்பமாக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தில் நல்லபாடனாக 'பரோட்டா' முருகேசன் நடிக்க கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை ஜெ.டி. விமல் கவனிக்க, 'மூடர்கூடம்' நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை 'மாஸ்' மோகனும், படத்தொகுப்பை சதிஷ் குரோசோவாவும் கையாண்டுள்ளனர். இணை தயாரிப்பு: அமராவதி

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுகவனம், "நிலத்தில் நன்றாக உழைக்கும் பாட்டாளியை நல்லபாடன் என்றும் அழைப்பது கொங்கு வட்டார வழக்கம். இம்மண்ணில் நிலங்களற்று உழைக்கும் மனிதர்களின் கதை தான் இது. ஒண்டிமுனி எனும் சிறு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள் இவர்கள். அவர்கள் கொண்ட கடவுள் நம்பிக்கை, ஆதிக்க மனம் கொண்டவர்களின் உழைப்பு சுரண்டல்கள், மனிதர்களின் வாழ்வு முறை, நல்லபாடனின் போராட்டம் உள்ளிட்டவற்றை இப்படம் பேசுகிறது. படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கிராமத்தில் வாழ்த்த உணர்வை கதை ஏற்படுத்தும். இது மக்களுக்கான கலை, நிச்சயம் மக்களை சென்றடையும் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' திரைப்படம் நவம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

***

Ondimuniyum Nallapaadanum' produced by K. Karuppusamy of Thirumalai Production and directed by Sugavanam presents a poignant portrayal of the Kongu region and its people.

Despite numerous films set against the backdrop of the Kongu region, an integral cultural and geographical part of Tamil Nadu, ‘Ondimuniyum Nallapaadanum’ emerges as a cinematic attempt to authentically depict the unexplored lives and landscapes of this region.

Produced by K. Karuppusamy under the banner Thirumalai Production and directed by Sugavanam, the film that offers a raw and unfiltered lens into the soil, spirit, and struggles of the Kongu land will release in theatres on November 28.

The film portrays the people and soil of the Kongu region in a pure, unadulterated manner. It delves into the customs, minor deity worship traditions, beliefs, and the current state of the land in the lives of the Kongu region’s people. Writers and cinema personalities who have watched the film so far have praised it, saying it truly brings out the feeling of living in a village.

With fresh ideas, new actors, a debut director, and a new producer coming together, 'Ondimuniyum Nallapaadanum' is built on an excellent storyline that reflects contemporary reality. It intricately captures themes such as power struggles, exploitation of labour, and battles for land rights.

The film stars ‘Parotta’ Murugesan as Nallapaadan, alongside Karthikeyan, Murugan, Vijayan, Senapathi, Chithra, Koushika, and Tamiliniyan Vikatan in key roles. Cinematography is handled by Vimal, while music is composed by ‘Moodar Koodam’ Natarajan Sankaran (NTR). Art direction is by J.K. Antony, stunt choreography by Mass Mohan, and editing by Sathish Kurosawa. The film is co-produced by Amaravathy.

Speaking about the project, director Sukavanam shared: "In the Kongu dialect, ‘Nallapaadan’ is a term used to describe a hardworking labourer, someone who toils deeply in the soil. This film tells the story of landless labourers—people who worship a folk deity called Ondimuni as their family god. The film delves into their spiritual beliefs, the exploitation they endure under oppressive systems, their way of life, and the struggles of Nallapaadan. It aims to transport viewers into the heart of a rural village. This is art for the people—and I believe it will resonate deeply with them.”

With its authentic storytelling and culturally rich narrative, ‘Ondimuniyum Nallapaadanum’ bankrolled by K. Karuppusamy of Thirumalai Production and directed by Sugavanam is slated for theatrical release on November 28.

Sundar C Kushboo Daughter Avantika Sundar 😍😍😍Latest Photoshoot
18/08/2025

Sundar C Kushboo Daughter Avantika Sundar 😍😍😍
Latest Photoshoot

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தி...
13/07/2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ).

பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத் திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இந்நிகழ்வினில்…

இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது…
எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும், நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில் தான் டப்பிங், சிஜி எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்து கொண்டதாவது…
சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகை ஷில்பா ஷெட்டி பகிர்ந்து கொண்டதாவது…
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி.

நடிகை ரீமா பகிர்ந்து கொண்டதாவது..
எங்களின் கேடி பட டீசரை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இது வெறும் டீசர் தான் படத்தில் இன்னும் பல ஆச்சரியம் இருக்கிறது. சஞ்சய் தத் சார், துருவ் சார், ஷில்பா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். துருவ் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிறைய டிப்ஸ் தந்தார். இப்படத்தை நீங்கள் பார்த்துப் பாராட்டுவதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.

நடிகர் துருவ் சர்ஜா பகிர்ந்துகொண்டதாவது…
எல்லோருக்கும் வணக்கம், இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுப்ரீத் பகிர்ந்துகொண்டதாவது…
மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை எங்களிடம் கொண்டுவந்த பிரேம் சாருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நட்சத்திரங்களுக்கு நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

KVN Productions வெங்கட் கே.நாராயணா வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

05/07/2025
28/06/2025

28/06/2025

Address

Chennai
600077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cini Mini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Cini Mini:

Share

Category