24/07/2026
தலைவர் பதவிக்கு போட்டி இட்டு தோத்தவரே தலைமை தாங்கிய அதிசயம்!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு!
எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக போட்டி போட்டு தோல்வியுற்ற திரு.வி.சி.குகநாதன் இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியது புதுமை.
தலைவராக சேரன், பொதுச் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றார்கள்.
சங்கத்தின் நலனுக்காக அனைவரும் ஒரே அணியாக இணைந்து சிறப்புடன் செயல்படுவோம் என்று கூறி அனைவரையும் வரவேற்று பேசினார், தலைவர் சேரன் .
FridayCinema Org